எல்பிட்டிய பிரதேச பாடசாலை ஒன்றில் 29 மாணவர்கள் திடீர் சுகயீனம்

எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 29 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று பிரதேச ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைவலி, காய்ச்சல், கடும் வயிற்றுவலி போன்றவை மாணவர்களுக்கு ஏற்பட்டிருப்பதாக வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் கிரிஷாந்த சில்வா தெரிவித்துள்ளார். பாடசாலையிலுள்ள குழாய் நீரை அருந்தியதாலேயே இவர்கள் சுகயீனமுற்றதாகக் கூறப்படுகின்றது. 12 வயதுக்கு உட்பட்ட 11 மாணவர்களும் 12 வயதுக்கு மேற்பட்ட 18 மாணவர்களும் இவ்வாறு சுகயீனமுற்றிருப்பதாகக் கூறப்படுகின்றது.
0 Response to "எல்பிட்டிய பிரதேச பாடசாலை ஒன்றில் 29 மாணவர்கள் திடீர் சுகயீனம்"
แสดงความคิดเห็น