கொழும்பில் 31 வெளிவிவகார அமைச்சர்கள் பங்குகொள்ளும் ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் இன்றையதினம் ஜனாதிபதி பங்குகொண்டார்.
எட்டாவது ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாடு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றையதினம் ஆரம்பமாகிய நிலையில் ஆசியாவின் 31 நாடுகளின் அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாடு இன்றையதினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுள்ளது.
இரண்டாவது நாளான இன்று இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டின் அங்குரார்ப்பண வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் பிரதான உரையினையும் நிகழ்த்தினார். ஆசிய ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று கூடிய மாநாட்டில் உலக பொருளாதார நெருக்கடி குறித்து வெளிவிவகார அமைச்சர்கள் தமது கவனத்தை செலுத்தினார்கள். இம்மாநாட்டின் முக்கிய ஆய்வுப்பொருளாக உலக பொருளாதார மீட்சி என்ற கருப்பொருள் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Response to "கொழும்பில் 31 வெளிவிவகார அமைச்சர்கள் பங்குகொள்ளும் ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் இன்றையதினம் ஜனாதிபதி பங்குகொண்டார்."
แสดงความคิดเห็น