கார்த்திகை மாதம் நீ வருவாய்யென நாம் காத்துக் கிடக்கிறோம் தலைவா! (கவிதை)

கடைசிப் போராட்டமென்று சொல்லிக் கொண்டு
காசுகேட்டு வந்தாங்க தலைவா..
கதவை திறந்தவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில்
கனபேர் கடகடவென உள்ளிட்டு
“காலி”யாய்யிருந்த கதிரைகளில்
உக்கார்ந்தாங்கள் தலைவா!
“கடைசிக்கட்ட” போராட்டமென்று சொல்லி
கழுத்தை பிடிக்காத குறையாக
காசு கேட்டாங்கள் தலைவா..
கையை விரித்து விரித்து காட்டி
கண்ணைக்கசக்கி கஸ்ரமெல்லாம் சொல்லியழுது
நாங்கள் காலம் காலமாய் கட்டிய தொகையின்
கணக்கையும் காட்டி காசு இப்போ இல்லையென்று
கைகளிரண்டையும் விரித்து காட்டினோம் தலைவா!..
இல்லை, இல்லை… இது கடைசிக்கட்ட போராட்டம்
எனச்சொல்லி கட்டாயப்படுத்தி
கடன் என்றாலும் எடுத்து தாருங்கோ.. – எனக்
காலில் விழாத குறையாக கதைத்தார்கள் தலைவா!..
கடைசி நேரத்தில் நாங்களும் கருணை காட்டிட
காகிதமொன்றை கையில் தந்து கையெழுத்து போடுங்கோ
கண்டபடி யோசிக்காதீங்கோ கடனெடுத்து தந்தால்
கட்டாயம் நாங்கள் அதைக் கட்டுவோம் என்றாங்கள் தலைவா!
கடன் தொகையை கூட கண்ணால் பார்க்காமல்
கைநாட்டை போட்டுக் கொடுத்தோம் தலைவா
கைநாட்டு போட்டுக் கொடுத்த காகிதத்தில்
‘கன”மான தொகையொன்றை போட்டு
கடன் எடுத்து போட்டாங்கள் தலைவா..
கடசிக்கட்ட போராட்டமும் முடிந்து போய்யிற்று
கடனெடுத்தவங்களும் காணாமல் போய்விட்டாங்கள்
கடனைக்கட்ட முடியாமல் - நாங்கள் இப்போ
கஸ்ரப்பட்டு போய் கண்ணீர் வடிக்கின்றோம் தலைவா
கருணை காட்டாயோ தலைவா- எங்கள்
கஸ்ரம் போக்காயோ தலைவா..
தலைவா! உன் தமிழீழ போராட்டதை நம்பி
நாங்கள் இப்போ தலைமுழுகிப் போய்
தலை நிமிரமுடியாமல் தவியாய் தவிக்கின்றோம் தலைவா
தந்த காசை திருப்பித் தருமாறு கேட்டால்
தருவம்தானே என தலைக்கனத்துடன் சொல்லுறாங்கள் தலைவா!..
தலைவா! தலைவா! எங்கள் தலைவா!
தவித்துக் கிடக்கும் எங்களை காப்பாற்றாயோ தலைவா
உன் தலையை கொஞ்சம் காட்டாயோ
பாதி தலையோடு நீ வந்தாலும்
பாதிப்பில்லை எங்களுக்கு தலைவா!..
பாதித்தலையை கண்ட பயத்திலாவது
பதுக்கி வைத்திருக்கும் பணத்தில்
பாதிப் பணத்தையாவது திருப்பி தருவார்கள் தலைவா
பார்த்துச் செய் தலைவா!..
சூரியதேவன் கையில் சுதந்திர தமிழீழம் மலரும்-
என்றெமக்கு சொல்லி சொல்லியே
சுளை சுளையாக காசை வாங்கியவங்கள்
நம்மையெல்லாம் சுத்திப்புட்டாங்கள் தலைவா!
காத்திகை மாதம் நீ வருவாய்யென
நாம் காத்துக் கிடக்கின்றோம் தலைவா
கடனையடைப்பதற்காய் நாம் காத்துக் கிடக்கிறோம் தலைவா
காத்திகை மாதம் கட்டாயம் நீ வா தலைவா!
காத்துக் காத்து கண்கள் பூத்துக் கிடக்கிறோம் தலைவா!
நீ கட்டாயம் உன் தலையை காட்டு தலைவா!!!
–கபிலன்.
0 Response to "கார்த்திகை மாதம் நீ வருவாய்யென நாம் காத்துக் கிடக்கிறோம் தலைவா! (கவிதை)"
แสดงความคิดเห็น