நாளை ஐநா சபையின் 64ஆவது ஆண்டு நிறைவு

ஐக்கிய நாடுகள் சபையின் 64ஆவது ஆண்டு விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நிகழ்வு ஒன்று இடம் பெற்றுள்ளது.
1945ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை உத்தியோக பூர்வமாக செயற்பட ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் 51 நாடுகள் அங்கம் வகித்த இந்த அமைப்பில் தற்போது 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
1955 ஆம் ஆண்டு இலங்கை இச்சபையில் உறுப்புரிமை பெற்றுள்ளது.
2ஆம் உலக யுத்தத்தின் பின்னர் உலக நாடுகளின் அமைதியையும் பாதுகாப்பையும் பேணும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற வைபவத்தில் கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பதிகாரி மெல்வின் குரே,
தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளைத் தாங்கள் சிறந்த முறையில் முன்னெடுத்துள்ளீர்கள்.
எனவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையர்கள் அனைவரும் சமாதானத்தைக் கட்டியெழுப்பி அமைதியாக வாழ வேண்டும்" எனக் குறிப்பிட்டார்
0 Response to "நாளை ஐநா சபையின் 64ஆவது ஆண்டு நிறைவு"
แสดงความคิดเห็น