
நேற்று முன்தினம் மாலை 5மணியளவில் ஏ9 வீதியில் வைத்து இராணுவ வாகனங்கள் நேருக்குநேர் மோதியதால் இராணுவ அதிகாரியொருவர் பலியாகியுள்ளார். வெற்றிலைக்கேணி எட்டாவது படையணியின் அதிகாரியான முதியான்சலாகே வசந்த பண்டார சமரக்கோன் என்பவரே பலியானவராவார். இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலீசார் நேற்று சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கையொன்றினை தாக்கல் செய்தனர். நீதிமன்ற பதில் நீதவான் கணபதிப்பிள்ளை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அதன் பின்னர் பார ஊர்தியின் சாரதியான கமலேஸ்மித் அலெக்சாண்டர் றொட்றிகோ என்பவரை எதிர்வரும் எட்டாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
0 Response to "இராணுவத்தின ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்கள் நேருக்குநேர் மோதியதால் இராணுவ அதிகாரியொருவர் பலி!"
แสดงความคิดเห็น