இடைத்தங்கல் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு வவுனியா பேரூந்து நிலையத்தில் நிற்கதியாக கைவிடப்பட்ட மக்களுடன் புளொட் முக்கியஸ்தர்கள்!

இருந்தும் இவர்களுக்கான பயண ஒழுங்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலையில் கடந்த 05நாட்களாக வவுனியா கச்சேரி, பஸ் நிலையம் என்பவற்றில் தங்கியிருந்தனர். இவர்களில் சில குடும்பங்கள் தமது சுய முயற்சியின் பயனாக தமது சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளபோதிலும் பல குடும்பங்கள் தற்போது கோயில்குளம் சிவன்கோவில் நிர்வாகத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோயில்குளம் சிவன்கோவில் பகுதியில் தங்கியுள்ள இம்மக்களைச் சந்தித்த புளொட் அமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன் மற்றும் புளொட் முக்கியஸ்தர்கள் அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு செய்து கொடுக்கவேண்டிய உதவிகள் குறித்தும் கோயில்குளம் சிவன்கோயில் நிர்வாகத்தினருடனும் கலந்துரையாடலையும் மேற்கொண்டு குறித்த மக்களுக்கான போக்குவரத்து உள்ளிட்ட உதவிகளைக் செய்ய ஆவனசெய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
0 Response to "இடைத்தங்கல் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு வவுனியா பேரூந்து நிலையத்தில் நிற்கதியாக கைவிடப்பட்ட மக்களுடன் புளொட் முக்கியஸ்தர்கள்!"
แสดงความคิดเห็น