வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: ஒபாமா பங்கேற்கிறார்

அதிபர் புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் துவக்கப்பட்டது. எனினும், புஷ் அந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றதில்லை. அவருக்கு பதிலாக அமெரிக்க அரசு உயரதிகாரிகள் பங்கேற்று வந்தனர். அதே தருணத்தில் புஷ் பதவிக் காலத்தில் வெள்ளை மாளியை ஒட்டியுள்ள பகுதியிலேயே தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
ஆனால் தற்போது வெள்ளை மாளிகையில் உள்ள ஈஸ்ட் ரூமில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் முதன் முறையாக நடத்தப்பட உள்ளது. இதில் அதிபர் ஒபாமா கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Response to "வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: ஒபாமா பங்கேற்கிறார்"
แสดงความคิดเห็น