தெஹிவளை உயிரியல் பூங்காவிற்குள் பொலித்தீன் கொண்டுசெல்லத் தடை

கொழும்பு தெஹிவளையிலுள்ள தேசிய உயிரியல் பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் பொலிதீன் கொண்டு செல்வதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் உயிரியல் பூங்காவிற்குள் பிரவேசிக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பூங்காவிலுள்ள விலங்கினங்களைப் பாதுகாக்கும் பொருட்டே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்கள் விலங்கினங்களுக்குப் பொலிதீன் பொதிகளுடன் உணவுப் பொருட்களை வழங்குவதைத் தடுப்பதே இதன் நோக்கம் எனத் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது
0 Response to "தெஹிவளை உயிரியல் பூங்காவிற்குள் பொலித்தீன் கொண்டுசெல்லத் தடை"
แสดงความคิดเห็น