லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் பாதுகாப்பு அதிகாரி சாட்சியளித்தார்.

முன்னாள் வெளி விவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பான உயர்நீதிமன்ற விசாரணைகள் மீண்டும் நேற்று இடம்பெற்றது.
நேற்றைய விசாரணையின் போது சாட்சி அளித்த காலஞ்சென்ற அமைச்சரின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலர் கொமாண்டோப் படையணியின் மேஜர் மனத்துங்க சாட்சியம் அளித்தார். கொழும்பு புள்ளர்ஸ் வீதியில் உள்ள வீடு அமைச்சரினால் கொள்வனவு செய்யப்பட்ட பொழுதிலும் அவர் அங்கு இரண்டு வருடம் 6 மாதங்கள் வரை வசிக்கவில்லை என மெய்ப்பாதுகாவலர் சாட்சியம் அளித்தார்.
வெளிவிவகார அமைச்சர் சேவையில் இருந்த காலப்பகுதியினில் லக்ஸ்மன் கதிர்காமரின் பாதுகாப்பிற்காக 52 இராணுத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் சாட்சி தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட வீட்டில் உடற்பயிற்சி செய்யும் நோக்கில் நீச்சல் தடாகம் ஒன்றையும் அவர் நிர்மாணித்ததாக தெரிவித்தார். இந்த வீட்டைச் சூழ கனேடிய தூதுவராலயத்திற்குச் சொந்தமான ஆதனம் இம்தியாஸ் பாக்கீர் மாக்கரின் இல்லம் லக்ஷ்மன் தலயசிங்கத்தின் இல்லம் மற்றும் வெளிநாட்டவர்கள் குடியிருந்த வீடொன்றும் காணப்பட்டதாக சாட்சியத்தின் போது அவர் மேலும் தெரிவித்தார். இந்த கொலை தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 14 திகதி வரை ஒத்தி வைக்க நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க உத்தரவிட்டார்.
0 Response to "லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் பாதுகாப்பு அதிகாரி சாட்சியளித்தார்."
แสดงความคิดเห็น