கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அமைதியான சூழலில் பார்ப்பதனையிட்டு மகிழ்ச்சியடைவதாக இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அமைதியான சூழலில் பார்ப்பதனையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். எமது தலைவர் கலைஞர் கருணாநிதி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றார். கலைஞர் கருணாநிதி மேற்கொண்ட முயற்சியினாலேயே எமது தூதுக் குழு இங்கு வருகைதர முடிந்துள்ளது. இங்குள்ள இடம்பெயர்ந்த மக்களின் நிவாரண கிராமங்களையும் நேரில் சென்று பார்வையிடவுள்ளோம். இவ்வாறு இந்தியப் பாராளுமன்றத் தூதுக் குழவின் தலைவர் ரீ.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
0 Response to "கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அமைதியான சூழலில் பார்ப்பதனையிட்டு மகிழ்ச்சியடைவதாக இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்."
แสดงความคิดเห็น