வைத்தியசாலைகள் மக்களுடையது - ஜனாதிபதி

வைத்தியர்களுக்கோ, பேராசிரியர்களுக்கோ அல்லது , சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கோ வைத்தியசாலைகள் சொந்தமானதல்ல எனவும் அது பொதுமக்களுக்கு சொந்தமானதெவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
அதிகாரிகளின் கருத்து முரண்பாடுகள் காரணமாக அனைத்து வசதிகளையும் கொண்ட வைத்தியசாலைகளை மக்களின் தேவைகளுக்காக திறக்காதிருக்க எவருக்கும் உரிமையில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதிகாரிகளின் கருத்து முரண்பாடுகள் காரணமாக கொழும்பு மாளிகாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய சிறுநீரக மாற்றுச் சிகிச்சை மற்றும் ஆய்வுப் பிரிவு, தொடர்ந்து மூடப்பட்டுள்ளமை குறித்து கவனம் செலுத்தியுள்ள ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சிகிச்சைப் பிரிவை உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளை நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
வட மத்திய மாகாணத்தில் சிறுநீரக நோய் அதிகளவில் காணப்படுவதால் அந்தப் பகுதி மக்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக அரச வைத்தியர்களும், மருத்துவபீட பேராசிரியர்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
0 Response to "வைத்தியசாலைகள் மக்களுடையது - ஜனாதிபதி"
แสดงความคิดเห็น