கிழக்கு மாகாணத்தில் தொடரும் வரட்சி நிலை

கிழக்கு மாகாணத்தில் தொடரும் வரட்சி நிலை காரணமாக நீர்ப்பாசனக் குளங்கள்,நீர்நிலைகள் மற்றும் கிணறுகள் அனைத்தும் வரண்டு காணப்படுகின்றன.
இதன் காரணமாக எதிர்வரும் பெரும்போக வேளாண்மைச் செய்கைக்கான விதைப்பு தடைப்பட்டுள்ளதோடு பயிர்களும் வரட்சியின் தாக்கத்தினால் கருகி காணப்படுகின்றன.
நீர்நிலைகளிலும், குளங்களிலும் நீர் இன்மையால் மீனவர்கள் கூட தொழில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
பொது மக்கள் தமது தேவைக்கான நீரைப் பெறுவதற்காக நீர் உள்ள இடங்களைத் தேடிச் செல்வதையும் காணக் கூடியதாக உள்ளது.
கால்நடைகள் கூட வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன..
0 Response to "கிழக்கு மாகாணத்தில் தொடரும் வரட்சி நிலை"
แสดงความคิดเห็น