யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட குடியிருப்புகள் !

தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளின்போது இத் தகவல்கள் வெளிவந்துள்ளதாகத் திணைக்களம் கூறுகிறது.
யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து புராதனக் குடியிருப்புகள் பற்றிய தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கலாநிதி செனெரத் திஸாநாயக்க சொன்னார். இத்தகவல்கள் தொல்பொருள் ஆய்வுகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தவையென அவர் மேலுந் தெரிவித்தார்.
யாழ்ப்பானத்தில் இத்தகைய பழமை வாய்ந்த குடியிருப்புகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் கிடைத்ததில்லையென அவர் கூறினார்.
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் முதன்முறையாக யாழில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளின்போதே கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்துக்குரிய குடியிருப்புகள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
.
0 Response to "யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட குடியிருப்புகள் !"
แสดงความคิดเห็น