இதுவே எனது இறுதி சந்தர்ப்பமாகவும் இருக்கலாம் - சரத் பொன்சேகா

மிகுந்த அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் இந்நாட்டை ஆட்கொண்டிருந்த பயங்கரவாதம், இராணுவ ரீதியில் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்காத வகையில் நீங்கள் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும்.
அத்துடன், மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கும் பொறுப்புணர்வுடன் ஒத்துழைப்பு நல்க வேண்டியது அவசியம் என்று கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா வேண்டுகோள் விடுத்தார்.
பல்வேறு உயர் மட்டத்திலான அடைவுகளை சந்தித்தவனாக இராணுவ சேவைக்கான அர்ப்பணிப்புமிக்க எனது கடமைப்பாட்டினை சரிவர நிறைவுசெய்துள்ளேன்.
இந்நிலையில் இராணுவ அணிவகுப்பை ஏற்று இத்தகையதொரு நிகழ்வில் உரையாற்றுவது இதுவே எனது இறுதி சந்தர்ப்பமாகவும் இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக கூட்டுப்படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவை கௌரவிக்கும் வகையிலான இராணுவ அணிவகுப்பு மரியாதையொன்று கொழும்பு இராணுவ தலைமைய மைதானத்தில் இன்று காலை இடம்பெற்றது.
40இராணுவ அதிகாரிகள், 1700படை வீரர்கள் ஒன்றிணைந்து நடத்திய அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்ட கூட்டுப்படைகளின் பிரதானி, அதன் பின்னர் நடத்திய உரையின் போதே மேற்கண்டவாறு கூறினார்.
0 Response to "இதுவே எனது இறுதி சந்தர்ப்பமாகவும் இருக்கலாம் - சரத் பொன்சேகா"
แสดงความคิดเห็น