பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா தீர்மானம்

பாகிஸ்தான் இராணுவத்துக்கு எப்-16 ரக போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
54 போர் விமானங்கள் வழங்கப்பட உள்ளன. அதற்காக முதல் கட்டமாக 18 விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதற்கான தயாரிப்பு பணி இன்று ஆரம்பமானது.
இதற்கான விழா வாஷிங்டனில் நடந்தது. இந்த விழாவில் பாகிஸ்தான் விமானப்படையின் தலைமை அதிகாரி மார்ஷல் ராவ் உமர் சுலைமான், அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஜப்பானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
18 போர் விமானங்களையும் அடுத்த ஆண்டு (2010) டிசம்பர் மாதத்துக்குள் பாகிஸ்தான் இராணுவத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
0 Response to "பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா தீர்மானம்"
แสดงความคิดเห็น