நாட்டின் அபிவிருத்தியில் இணையுமாறு புலம்பெயர் இலங்கையருக்கு ஜனாதிபதி அழைப்பு

இலங்கையின் தற்போது மோதல்கள் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியில் இணையுமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிநாடுகளில் வதியும் இலங்கையரின் தொழினுட்ப அறிவு, தொழில் முயற்சித் திறன் மற்றும் நிதிப் பங்களிப்பை நாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் தாய் நாட்டுக்குத் திரும்பி தற்போதைய நிலைமைகளையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கண்டறியுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
அபிவிருத்திச் செயற்பாட்டில், தமக்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய துறையை அடையாளங்கண்டு அத்துடன் இணைந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
இது தொடர்பான விசேட செயற்றிட்டமொன்று ஜனாதிபதி தலைமையில் நவம்பர் மாதம் 14ந் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாகாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
0 Response to "நாட்டின் அபிவிருத்தியில் இணையுமாறு புலம்பெயர் இலங்கையருக்கு ஜனாதிபதி அழைப்பு"
แสดงความคิดเห็น