தெஹிவளை மேம்பாலம் இம்மாதத்தில் திறக்கப்படும்!

தெஹிவளையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் இம்மாதத்துக்குள் திறந்து வைக்கப்படுமென நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த 10ந் திகதிக்குப் பின்னர் இந்த மேம்பாலத்தைத் திறந்துவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ரீ.பி. ஏக்கநாயக்க தெரிவித்தார்.
மேம்பால நிர்மானப் பணிகள் அநேகமாகப் பூர்த்தியடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர் பன்னிப்பிட்டி மேம்பாலத்தை விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
இதேபோன்று பத்தரமுல்ல மேம் பாலப் பணிகள் எதிர்வரும் 20ந் திகதி ஆரம்பமாகுமென அமைச்சர் கூறினார்.
0 Response to "தெஹிவளை மேம்பாலம் இம்மாதத்தில் திறக்கப்படும்!"
แสดงความคิดเห็น