ப்ரியாமணி வேண்டாம்

யோகி படத்தையடுத்து கண்ணபிரான் படத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் இறங்கிவிட்டார் அமீர். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடிக்க ப்ரியாமணியை அழைக்கலாம் என்று நினைத்திருந்தார். எனக்கும் அவருக்குமான சண்டை தீர்ந்துவிட்டது. நாங்கள் சமாதானம் ஆகிவிட்டோம் என்று பெரிய மனசோடு பதில் கூறியிருந்தார் செய்தியாளர்களிடம். ஆனால், அமீர் என்னிடம் கண்ணபிரான் குறித்து எதுவும் பேசவில்லை. எனக்கு கதை பிடித்திருந்தால் அப்படத்தில் நடிப்பேன் என்று ப்ரியாமணி சொல்ல, அவ்வளவு பேச்சு ஆகாதம்மா என்று அந்த எண்ணத்தையை கைவிட்டுவிட்டாராம் அமீர்.
இப்போது அவரது பார்வை தீபிகா படுகோனேவின் தங்கை சஞ்சிதா படுகோனே பக்கம் திரும்பியுள்ளதாம். அமீர் அழைக்கிறார் என்றதுமே, எவ்வித அலட்டலுக்கும் இடம் கொடுக்காமல் வீடியோ ஷ§ட்டுக்கு கூட ரெடி என்று கூறிவிட்டாராம் அவர்.
விரைவில் சென்னையில் இவருக்கு வீடியோ டெஸ்ட் இருக்கிறது. விஷயம் ப்ரியாமணிக்கு தெரியுமா….
0 Response to "ப்ரியாமணி வேண்டாம்"
แสดงความคิดเห็น