மட்டக்களப்பில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு வாபஸ்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாநகர முதல்வர் தவிர்ந்து அனைத்து உள்ளுராட்சி சபை தலைவர்கள்,உறுப்பினர்களுக்கும் ,அரசியல் கட்சிகளின் அலுவலகங்களுக்கும் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்று மாலையுடன் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைத் தலைவர்களுக்கு 4 பொலிஸாரும்,பிரதித் தலைவர் உட்பட உறுப்பினர்களுக்கு இரண்டு பொலிஸாரும் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்தது. இதனைத் தவிர டெலோ ,ஈ.பி.டி.பி. ,புளொட் ,ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளின் காரியாலயங்களுக்கு வழங்கப்படிருந்த பொலிஸ் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளைக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
எவ்வித முன்னறிவித்தல்களும் இன்றி தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டமை குறித்து சம்பந்தப்பட்டவர்கள் விசனமும் கவலையும் அடைந்துள்ளனர்.
வாபஸ் பெறப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீள வழங்குமாறு சில உள்ளுராட்சி சபைத்தலைவர்களும் ,உறுப்பினர்களும் அரசியல் கட்சி அமைப்பாளர்களும் கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரைக் கேட்டுள்ளனர்.
தற்போது கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பான சூழ்நிலை உறுதிப்படுத்தப்பட்டதன் காரணமாகவே இந் நடவடிக்கை என பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது
0 Response to "மட்டக்களப்பில் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு வாபஸ்"
แสดงความคิดเห็น