ஊசி மருந்துக் குப்பியுள் கண்ணாடித் துண்டு

இரத்தினபுரி வைத்தியசாலையில் நுண்ணுயிக் கொல்லி மருந்தடங்கிய ஊசிக் குப்பியுள் கண்ணாடித் துண்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊசி மருந்தை நோயாளியொருவருக்கு ஏற்றத் தயாரானபோது வைத்தியர்கள் கண்ணாடித் துண்டை மருந்துக் குப்பியினுள் கண்டதாக வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மருந்துக் குப்பியுள்ளிருந்த கண்ணாடித்துண்டின் அசைவின்போது சத்தம் கேட்டதாகவும் அப்போதுதான் கண்ணாடித் துண்டு குப்பியுள் இருந்தமை தெரிய வந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் கூறின.
மருந்து விநியோகப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சரத் வீரபண்டார, இதுபற்றித் தமக்கு எவரும் எவ்வித முறைப்பாடும் செய்யவில்லையெனக் கூறினார்.
0 Response to "ஊசி மருந்துக் குப்பியுள் கண்ணாடித் துண்டு"
แสดงความคิดเห็น