உலகில் நீளமான கொல்ப் மைதானம் அவுஸ்திரேலியாவில்

உலகில் மிக நீளமான கொல்ப் மைதானம் அவுஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
18 பொந்துகளைக் கொண்ட இந்த மைதானத்தின் நீளம் 1,365 கிலோ மீற்றர்கள் (848 மைல்கள்) ஆகும். இந்த மைதானம் அவுஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதõவது தென் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகும் இந்த மைதானம் மேற்கு அவுஸ்திரேலியாவில் முடிவடைகிறது.
இதில் ஒவ்வெõரு பொந்துகளுக்கும் இடையில் பல மைல்கள் இடைவெளி காணப்படுகிறது. கொல்ப் வீரர் ஒரு பொந்தில் விளையாடி விட்டு மற்றைய பொந்தில் விளையாடுவதற்கு வாகனத்தில் பயணிக்க வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Response to "உலகில் நீளமான கொல்ப் மைதானம் அவுஸ்திரேலியாவில்"
แสดงความคิดเห็น