கிழக்கு மாகாணம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள்

நேற்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் கலாநிதி என்.பத்மநாதன் ,பீடாதிபதிகள் ,விரிவுரையாளர்கள் ஆகியோர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.
பல்கலைக்கழகம் எதிர்நோக்குகின்ற சவால்கள் ,பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாகவும் பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் இச் சந்திப்பின் போது ஆராயப்பட்டதோடு அதற்கான தீர்வுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
"கிழக்கு பல்கலைக்கழகமானது கிழக்கு மாகாணத்தின் மிகவும் பெரிய ஓர் சொத்தாகும். இதனைப் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு இம் மாகாத்ணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல்வாதிகளின் கடமையாகும்.
கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற வளங்கள் இனங்காணப்பட்டு அது தொடர்பான பல ஆய்வுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் இதற்கான நிதி மாகாண சபை ஊடாக வழங்கப்படும்." என இக் கலந்துரையாடலில் மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்
" கலாச்சாரத்தினைப் பிரதிபலிக்கின்ற சான்றுகள், தொடர்பான தொல்பொருள் ஆய்வுகள், கிழக்கு மாகாணத்தின் ஆரம்ப காலம் முதல் தற்போது வரையான எல்லை நிர்ணயம், குடிசனப்பரம்பல் மற்றும் வளர்ச்சி வீதம்,இம் மாகாணத்தில் புற்று நோய் அதிகரிப்பிற்கான காரணம் விவசாயம் ,மீன்பிடி, உல்லாசம்,சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் "எனவும் கேட்டுக் கொண்டார்.
0 Response to "கிழக்கு மாகாணம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள்"
แสดงความคิดเห็น