நமக்காக நீதி கேட்க இத்தனை பேரா - நமீதா!!

ரிப்போர்ட்டர் ‘மச்சான்ஸ்களின் சாபத்திலிருந்து தப்பிவிட்டார் நமீதா. வேறொன்றுமில்லை, நடிகர் சங்க கண்டன கூட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை அவர். அப்படி வந்திருந்தால் எதையாவது பேசி, வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கியிருக்க கூடும்.
‘எக்கு தப்பு நடிகைகளின் லிஸ்ட்டில் நமீதாவின் படத்தையும் போட்டுவிட்டது அந்த நாளிதழ். எல்லாரையும் போலவே நமீதாவுக்கும் அழைப்பு அனுப்பினார்கள் நடிகர் சங்கத்திலிருந்து. ஆனால் கண்டன கூட்டத்தில் இவர் மட்டும் மிஸ்சிங். இதில், ரொம்பவே அப்செட் ஆனது இவரைபோலவே பாதிக்கப்பட்ட சக நடிகைகள்தானாம். ஏன் வரவில்லை நமீதா? என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு, சம்பந்தப்பட்ட நாளில் இவர் ஊரிலேயே இல்லை என்று பதில் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் அவர் எங்கு இருந்தார்!
ஆறடி தாஜ்மஹால் பொய் சொல்லுமா? தெலுங்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக ஜெர்மனி போய்விட்டாராம். அங்கிருந்தவருக்கு உடனுக்குடன் தகவல்கள் பரிமாறப்பட்டதாம். எல்லாவற்றையும் காது கொடுத்து கேட்ட நமீ, நமக்காக நீதி கேட்க இத்தனை பேரா என்று பூரித்து போனாராம். “பிரச்சனைக்கு காரணமா இருந்த புவனேஸ்வரியை நான் பார்த்தது கூட இல்லை. ஆனால் அவங்க வெளியே வந்ததும் சொல்லுங்க. நேர்லே பார்த்து அப்படி சொன்னீங்களான்னு கேட்கணும் என்றாராம்.
வேணும்னா நமீதா சார்பா ஜாமீனுக்கு ட்ரை பண்ணலாமே!
0 Response to "நமக்காக நீதி கேட்க இத்தனை பேரா - நமீதா!!"
แสดงความคิดเห็น