கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வீட்டு திருமணத்தில் ரஜினி – கபில்
கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வீட்டு திருமணத்தில் ரஜினி – கபில்
முன்னாள் கிரிக்கெட் வீரர் கே ஸ்ரீகாந்த் மகன் ஆதித்யா – ஐஸ்வர்யா திருமண வரவேற்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் முன்னாள் கேப்டன் கபில்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் வழக்கத்தைவிட உற்சாகமாகக் காணப்பட்டார் ரஜினி. அதிகக் கெடுபிடிகள் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரஜினியிடம் ஓடிப் போய் ஆட்டோகிராப் வாங்குவதில் குறியாக இருந்தனர். அவரும் சிரித்துக் கொண்டே சளைக்காமல் ஆட்டோகிராப் போட்டுத் தள்ளினார்.
இன்னொரு பக்கம் கபில்தேவும் ஆட்டோகிராப் வேட்டைக்காரர்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருந்தார்.
மணமக்களுடன் ரஜினி, திருமதி ரஜினி மற்றும் கபில் உள்ள படங்கள்…
0 Response to "கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வீட்டு திருமணத்தில் ரஜினி – கபில்"
แสดงความคิดเห็น