கடல்கடந்த தமிழீழம் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு நோர்வேயின் கவனத்துக்கு

கடல்கடந்த தமிழீழத்தை அமைப்பது பற்றி நோர்வேயில் நடைபெற்று வருகின்ற முன்னெடுப்புக்கள் தொடர்பில் நோர்வேயின் கவனத்திற்கு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கொண்டுவந்துள்ளார்.
அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவுக்கும் இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் டோர் ஹெட்ரமுக்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பின்போதே வெளிவிவகார அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசின் கவலையயையும் அதிருப்தியையும் தெரிவித்ததோடு இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்துமாறு கோரிகை விடுத்தார்.
0 Response to "கடல்கடந்த தமிழீழம் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு நோர்வேயின் கவனத்துக்கு"
แสดงความคิดเห็น