நியூஸிலாந்தில் இன்று காலை பயங்கர நில நடுக்கம்

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. சான்டோ தீவிலிருந்து வடமேற்கே 294 கி.மீட்டரிலும் போர்ட்விலாவிலிருந்து வடமேற்கே 598 கி.மீ. தொலைவிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.
நில நடுக்கம் உணரப்பட்ட அடுத்த 15 நிமிடங்களில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவானது. இதனால் ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து, பிஜி உள்ளிட்ட 11 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
பின்னர் சில மணி நேரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. நில நடுக்கம் காரணமாக பல இடங்களில் தகவல் துண்டிக்கப்பட்டுள்ளதால் சேத விபரம் குறித்து அறிவதில் சிக்கல் நீடித்து வருவதாகக் குறப்படுகின்றது.
பிலிப்பைன்ஸிலும் நில நடுக்கம்
அதே வேளை பிலிப்பைன்சில் இன்று அதிகாலை பயங்கர நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.7 ஆக பதிவாகி உள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
நில நடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்ச் சேதம் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை
0 Response to "நியூஸிலாந்தில் இன்று காலை பயங்கர நில நடுக்கம்"
แสดงความคิดเห็น