ஸ்டாலின் தலைமையில் இந்திய அனைத்துக் கட்சி குழு 10ஆம் திகதி இலங்கை விஜயம்

நிவாரணக்கிராமங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்தவர்களின் நிலைமைகளை நேரடியாக பார்வையிடும் பொருட்டு தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவொன்று எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகளை ஆராயும் பொருட்டு அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய பாராளுமன்றக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என தமிழக அனைத்துக் கட்சிகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையிலேயே பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்றை அனுப்பிவைக்கும் தீர்மானத்தை இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.இது தொடர்பான இறுதிமுடிவு இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Response to "ஸ்டாலின் தலைமையில் இந்திய அனைத்துக் கட்சி குழு 10ஆம் திகதி இலங்கை விஜயம்"
แสดงความคิดเห็น