jkr

மீள்குடியேற்றும் செயற்பாடுகளின் முன்னேற்றம் ஏமாற்றமளிக்கிறது- பிரிட்டன்


இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றும் செயற்பாடுகளில் இதுவரை காணப்படும் முன்னேற்றம் ஏமாற்ற த்தைத் தருவதாக அமைந்துள்ளது என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் அபிவிருத்தி அமைச்சர் மைக் பொஸ்டர் தெரிவித்துள்ளதாக பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இருக்கும் "மூடப்பட்ட' முகாம்களிலிருந்து புதிய "மூடப்பட்ட' முகாம்களுக்கு இடம்பெயர்ந்தவர்களை மாற்றும் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் நிதியுதவி வழங்க மாட்டாது என்றும் பிரிட்டிஷ் அபிவிருத்தி துறை அமைச்சர் மைக் பொஸ்டர் தெரிவித்துள்ளதாகவும் பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரிட்டிஷ் அமைச்சர் வடபகுதியிலுள்ள முகாம்களுக்கு நேற்று விஜயம் செய்தார். இதனையடுத்து என்றும் இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு அவர் சென்று பார்வையிட்ட பின்னர் கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒக்டோபர் நடுப்பகுதி முதல் டிசம்பர் மாதம் வரையான பருவப்பெயர்ச்சி மழையினால் முகாம்களில் வாழ்ந்து வரும் 2 லட்சத்து 60 ஆயிரம் சிவிலியன்கள் மீது ஏற்படப் போகும் தாக்கம் குறித்து அமைச்சர் கவலை தெரிவித்தார். கண்ணிவெடி அகற்றுவதற்கும் முகாம்வாசிகளை சொந்த வீடுகளுக்கு அனுப்புவதற்கும் உதவுவதன் மூலம் பிரிட்டன் மீள் குடியமர்வுப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. ஆனால் இதுவரை இப்பணிகளில் காணப்படும் முன்னேற்றம் ஏமாற்றத்தை தலுவதாக இருக்கிறது என்று மைக் பொஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்தவர்களின் நடமாடும் சுதந்திரம் குறிப்பாக பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர்களுக்கு நடமாடும் சுதந்நிரம் வழங்கப்படுவது எம்மை பொறுத்த வரை முன்னுரிமை விடயமாகும். கடந்த மே மாதம் மைக் பொஸ்டர் மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் முகாம் நிலைமையில் முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனால் எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழை பாதிப்பை தரலாம். நீரை அசுத்தமடையச் செய்து சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி நோய்களும் பரவலதூரம்.

முகாம்களுக்குள் மழையினால் ஏற்படக்கூடிய மனித அவலங்களை தவிர்ப்பதற்கு உறவினர், நண்பர்களுடன் முகாம்வாசிகளை தங்க அனுமதிப்பதே பொருத்தமான நடவடிக்கையாகும். உதாரணமாக, மிகப் பெரும் முகாமான மெனிக் பாமிலுள்ள அகதிகளில் 70 சதவீதமானோரை வெளியே தங்க வைக்கலாம். ஆனால் புதிய மூடப்பட்ட முகாம்களுக்கு இடம்பெயர்ந்தவர்களை மாற்றுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும். வருடம் முடிவதற்குள் பெரும்பான்மையான முகாம்வாசிகளை விடுவிப்பதென்ற வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றுமானால் மேலும் 4.8 மில்லியன் பவுண்ஸை நிதியுதவியை வழங்க பிரிட்டன் தயாராக இருக்கிறது என்றும் அமைச்சர் பொஸ்டர் தெரிவித்தார்.

பல முகாம் வாசிகளுக்கு உதவ அவர்களது உறவினர்களும் நண்“பர்களும் காத்திருக்கிறார்கள். அத்தகைய முகாம்வாசிகளை அரசாங்கம் ஒரு தற்காலிக நடவடிக்கையாக முகாம்களிலிருந்து விடுவிக்க வேண்டும். அரசாங்கம் அப்படி நடந்து கொண்டால் பருவப்பெயர்ச்சி மழை ஓய்ந்ததும் மீதமுள்ள மூடப்பட்ட முகாம்களில் உயிர்காக்கும் அவசரகால நடவடிக்கைகளுக்கு மட்டும் பிரிட்டன் உதவும் என்றும் பொஸ்டர் தெரிவித்தார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மீள்குடியேற்றும் செயற்பாடுகளின் முன்னேற்றம் ஏமாற்றமளிக்கிறது- பிரிட்டன்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates