ஸ்ரீசாந்த் தனது பழக்கங்களை மாற்றிக் கொள்ளவேண்டும்

இங்கிலாந்து கவுண்டி அணியான வார்விக் ஷயருக்கு பிரட் லீ, மோர்னி மோர்கெல் போன்ற வீரர்கள் இல்லாத நிலையில் ஸ்ரீசாந்தை அழைக்கலாம் என்று வார்விக் ஷயர் அணிக்கு பரிந்துரை செய்தவர் டோனல்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்தியாவிற்காக நீண்ட காலம் விளையாட வேண்டும் என்ற ஆசை ஸ்ரீசாந்திற்கு இருந்தால் அவர் தன் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது நல்லது.
வார்விக் ஷயர் அணிக்காக சில நல்ல ஸ்பெல்களை அவர் வீசினார், போட்டியின் முடிவுகளில் அவரது பந்து வீச்சும், எடுத்த விக்கெட்டுகளும் ஒரு முக்கியப் பங்களிப்பை செய்தது.
ஆக்ரோஷமாக ஒருவர் வேண்டும் என்று நாங்கள் நினைத்த போது, ஸ்ரீசாந்த் அந்த தேவையை நிறைவேற்றுவார் என்று எனக்கு தோன்றியது. நான் அவரை கட்டுப்படுத்த முடியும் என்று எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் இதைப்பற்றி நிறைய பேசினோம்.
நான் அவருடன் பணியாற்றிய வரையில் அவரது பயிற்சிப் பழக்கமுறைகள் முற்றிலும் மாற வேண்டும். அவர் களத்தில் இறங்கும் முறை சரியல்ல, இது மாறவேண்டும். மேலும் சில நுணுக்கமான விஷயங்களுக்காக அவர் நேரம் ஒதுக்குவதில்லை.
அவர் ஆக்ரோஷமான வீரர், அவர் கிரிக்கெட்டை நேசிக்கிறார், ஆனால் விஷயங்கள் தனக்கு சாதகமாக இல்லையெனும்போது கொதிப்படைந்து ஏதாவது தவறு செய்து விடுகிறார். இதுதான் அவரை தளரச் செய்கிறது. அவர் தன்னை நடத்திக் கொள்ளும் விதம் சரியாக இல்லை, உடல் மொழி ஆக்ரோஷமாக இருந்தால், பந்து வீச்சில் நல்ல ஃபார்மில் இருப்பது அவசியம். களத்திற்கு வெளியே அவர் ஒரு குழந்தை போன்றவர், அவர் வெளியே சரியான முறையில் பேசுகிறார், நடந்து கொள்கிறார், ஆனால் என்னைப் பொறுத்த வரை களத்தில் செய்ததற்கு களத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும், வெளியே வந்து மன்னிப்பு கேட்பது காலங்கடந்த ஒன்று.
அவரது பந்து வீச்சில் முக்கியப் பிரச்சனை என்னவெனில் சமீப காலமாக அவர் பந்து வீசும்போது முன்னால் வரும் கை மிக சீக்கிரமாக கீழிறங்கி விடுகிறது. அந்தக் கையை அவர் சரியாக பயன்படுத்துவதில்லை. இதனை அவர் சரி செய்தால் மீண்டும் அவர் ஸ்விங் செய்ய முடியும்”.
இவ்வாறு கூறியுள்ளார் ஆலன் டோனல்ட்.
0 Response to "ஸ்ரீசாந்த் தனது பழக்கங்களை மாற்றிக் கொள்ளவேண்டும்"
แสดงความคิดเห็น