புலிகளின் மகளிர் படையணி முக்கியஸ்தர் வவுனியாவில் குடும்பத்துடன் சரண்

புலிகளின் மகளிர் படையணி முக்கியஸ்தர் என்று கூறப்படும் யுவதியொருவர் தனது குடும்பத்தினருடன் வவுனியா பொலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பைமர் என்றழைக்கப்படும் டக்ளஸ் ஜெனீட்டா (வயது 22) என்பவரே இவ்வாறு சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மதவாச்சிக்;குளம், காளிகோவிலடியில் குடும்பத்தினருடன் வசித்துவந்த குறித்த யுவதி புலிகள் இயக்கத்தில் நீண்டகால உறுப்பினராக இருந்தவர் என்றும் யுத்தங்கள் பலவற்றில் ஈடுபட்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "புலிகளின் மகளிர் படையணி முக்கியஸ்தர் வவுனியாவில் குடும்பத்துடன் சரண்"
แสดงความคิดเห็น