
கர்ப்பப்பை தொடர்பான சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணொருவர், மூன்று நாட்கள் கழித்து மீண்டும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டபோது அவரது வயிற்றுக்குள் இருந்து ஒன்பது அடி நீளமான பஞ்சுத் துணி வெளியில் எடுக்கப்பட்ட விபரீதம் கொழும்பு கோட்டை ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த பெண் மூன்று நாட்களின் பின்னர் உயிரிழந்த பரிதாபமும் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் கர்ப்பப்பை சத்திர சிகிச்சைக்காக செட்டம்பர் 15ம் திகதி குறித்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும் சத்திர சிகிச்சைக்கு பின்ன குறித்த பெண்ணின் நிலை மோசமடைந்ததையடுத்து திரும்பவும் மூன்று நாட்களின்பின் அவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவ்வாறு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டபோது அவரது வயிற்றுக்குள்ளிருந்து ஒன்பது அடி நீளமான பஞ்சுத்துணி இருந்தமை வைத்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இந்நிலையில் மூன்று நாட்கள் கடந்ததும் அவர் உயிரிழந்துள்ளார். விசாரணைகள் தொடர்கின்றன.
0 Response to "கொழும்பில் கர்ப்பப்பை சிகிச்சை பெற்ற பெண்ணின் வயிற்றுக்குள் ஒன்பது அடி நீளத்துணி மீட்பு, பெண் மரணம்"
แสดงความคิดเห็น