jkr

பிள்ளையானை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் -அமைச்சர் கருணாஅம்மான்


அமைச்சராக உள்ள கருணாவுக்கும் முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையே வளர்ந்து வரும் முரண்பாடுகளின் தொடர்ச்சியாக பிள்ளையானை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு வேறு ஒருபொருத்தமான நபரை அப்பதவியில் அமர்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமைச்சர் கருணா மட்டக்களப்பு மேஜரான சிவகீத்தா பிரபாகரனே முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமானவர் என மக்கள் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக வரும்பொருட்டு பிள்ளையான் சிலரை தவறாக வழிநடத்தியதாக தெரிவித்துள்ள கருணாஅம்மான் ஆரம்பத்தில் பிள்ளையான் முதலமைச்சராக வருவதற்கு தாம் ஆதரவு வழங்கிய போதும் இப்போது அதற்கு வருந்துவதாகத் தெரிவித்துள்ளார். பிள்ளையான் ஜனாதிபதியிடம் மட்டக்களப்பை விருத்திச் செய்வதற்கு பணம் கேட்டிருந்தால் ஜனாதிபதியும் அதைக் கொடுத்திருப்பாராம் ஆனால் பிள்ளையானோ பொலிஸ் அதிகாரம் கேட்கிறார் எனத் தெரிவிக்கும் அமைச்சர்கருணா பிள்ளையான் நிர்வாகத்துடன் இணைந்து இனியும் கிழக்கின் அபிவிருத்திக்கு அரசு உதவமாட்டாது என்றும் அமைச்சர்கருணா தெரிவித்துள்ளாராம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பிள்ளையானை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் -அமைச்சர் கருணாஅம்மான்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates