சட்டவிரோத குடியேற்றவாசிகளை இந்தோனேசியாவில் இருந்து திருப்பியழைக்க ஏற்பாடு

இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 260 இலங்கையர்களையும் விடுதலை செய்து இலங்கைக்கு திருப்பி அழைத்து வருதவற்கான முயற்சிகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது. இவர்கள் குறித்து சர்வதேச புலம்பெயர் அமைப்புடன் பேச்சு நடத்தி வருவதாகவும் குறித்த இலங்கையர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்டவேளை இவர்களை இந்தோனேசியா கடற்படை மறித்து வைத்துள்ளது மேலும் இவர்கள் தமிழில் உரையாற்றும் போது கைதான 260பேரும் இலங்கையர்கள் என இதுவரை உறுதிப்படுத்தப் படவில்லை என வெளிவிவகார அமைச்சு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் இந்தோனேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினூடாக இவர்கள் பற்றிய விபரங்களை திரட்டவும் இவர்களை விடுவிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Response to "சட்டவிரோத குடியேற்றவாசிகளை இந்தோனேசியாவில் இருந்து திருப்பியழைக்க ஏற்பாடு"
แสดงความคิดเห็น