சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபரிற்கு விளக்கமறியல் உத்தரவு

10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இளம் குடும்பஸ்தரொருவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனையைச் சேர்ந்த ஜெய்னுடீன் நவுப்டீன் என்ற இச் சந்தேக நபர் கடந்த 26 ஆம் திகதி மாலை வீட்டிலிருந்து கடைக்கு சென்று கொண்டிருந்த குறிப்பிட்ட சிறுமியை வழிமறித்து வீடொன்றிற்குள் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும்,இது தொடர்பாக குறித்த சிறுமியின் பெற்றோர் கடந்த 6 ஆம் திகதி அறிந்துள்ளதாகவும் சந்தேக நபரை இன்று வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பொலிசார் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்
0 Response to "சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபரிற்கு விளக்கமறியல் உத்தரவு"
แสดงความคิดเห็น