தீவகத்தைச் சேர்ந்த 200 குடும்பங்கள் வவுனியாவில் இருந்து இன்று அனுப்பி வைப்பு

மனிக்பாம் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள யாழ் தீவகப்பகுதிவாசிகளான 200 குடும்பங்களைச் சேர்ந்த 639 பேர் இன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்த இவர்கள் வேலணை மற்றும் காரைநகர் ஆகிய இடங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் படிப்படியாக அந்தந்த பிரதேச செயலக அதிகாரிகளின் ஊடாக அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Response to "தீவகத்தைச் சேர்ந்த 200 குடும்பங்கள் வவுனியாவில் இருந்து இன்று அனுப்பி வைப்பு"
แสดงความคิดเห็น