மழைக்கு முன் மக்கள் மீள் குடியமாத்தப்பட வேண்டும்-மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர்

மழைக்காலம் விரைவில் ஆரம்பமாக இருப்பதால் வவுனியா மற்றும் செட்டிக்குளம் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம் பெயர்ந்த வன்னி மக்கள் உடனடியாக தத்தமது கிராமங்களுக்கு மீள் குடியமர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட் தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் வலியுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, மழைக்காலம் ஆரம்பமானால் முகாம்களில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் என அனைவரும் எதிர்பாக்கின்றனர். இந்த நிலையில் உடனடியாக மக்களை மீள்குடியேற்ற வேண்டும் என அனைத்து அமைப்புக்களும் தொடர்ந்தும் அரசை வலியுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Response to "மழைக்கு முன் மக்கள் மீள் குடியமாத்தப்பட வேண்டும்-மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர்"
แสดงความคิดเห็น