கப்பம் பெறுதல் உட்பட குற்றச் செயல்களில் ஈடுபட்ட நால்வர் வவுனியாவில் கைது

கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல குற்ற செயல்களில் ஈடுபட்டார்கள் என்று சந்தேகிக்கப்பட்ட பெண் ஒருவரும் மேலும் மூவரும் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சந்தேக நபர்கள் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிமால் மெதிவக்க தெரிவித்தார்.
கப்பம் வாங்குதல், கொலை, கொள்ளை உட்பட பல குற்றசெயல்களில் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக வவுனியா குற்றப் புலனாய்வு குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்தச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
0 Response to "கப்பம் பெறுதல் உட்பட குற்றச் செயல்களில் ஈடுபட்ட நால்வர் வவுனியாவில் கைது"
แสดงความคิดเห็น