ஆஸியில் தஞ்சம் கோரியோரில் பயங்கரவாதிகள் இல்லை : கெவின் ரொட்

தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்போரில் பயங்கரவாதிகள் உள்ளடங்கவில்லை என அந்நாட்டு பிரதமர் கெவின் ரொட் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதைப் போன்று சட்டவிரோத குடியேற்றக்காரர்களில் பயங்கரவாதிகள் எவரும் ஊடுறுவவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு அடிப்படையற்ற வகையில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், தற்போதைய ஆட்சியாளர்கள் எல்லைப் புற பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இதன் காரணமாகவே அதிக எண்ணிக்கையிலானோர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதாக அவை சுட்டிக்காட்டியுள்ளன.
சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிய மேலும் இரண்டு படகுகளை அவுஸ்திரேலிய பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியுள்ளனர். இந்தப் படகுகளில் 32 இலங்கையர்கள் இருப்பதாக சர்வதேச ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 Response to "ஆஸியில் தஞ்சம் கோரியோரில் பயங்கரவாதிகள் இல்லை : கெவின் ரொட்"
แสดงความคิดเห็น