சூர்யாவுக்கு வெட்டு… வடிவேலு மகிழ்ச்சி

ஆதவன் படத்தின் நீளம் சற்று அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் ஃபீல் பண்ணுவதால், இருபது நிமிட காட்சிகளை வெட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தனது உதவி இயக்குனர்களை எல்லா தியேட்டர்களுக்கும் அனுப்பி இந்த வேலையை கன கச்சிதமாக செய்ய உத்தரவிட்டிருக்கிறாராம் கே.எஸ்.ரவிகுமார்.
படத்தில் ரசிக்கக் கூடிய பகுதிகள் எவை என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கும் அவர், ‘வெட்டு’ குறிப்புக்குள் கொண்டு வந்த காட்சிகள் அத்தனையும் சூர்யா சம்பந்தப்பட்டது. அதிலும் சூர்யா மவுத் ஆர்கான் ஊதிக்கொண்டே அறிமுகம் ஆகும் அந்த காட்சியில்தான் முதலில் கத்தரியை வைத்தாராம். (இந்த காட்சியை சூர்யாவின் ரசிகர்களே விரும்பவில்லை என்பது வேறு விஷயம்)
வடிவேலு வருகிற எந்த காட்சியிலும் தப்பி தவறி கூட கை வைத்துவிட வேண்டாம். இன்னும் நீளத்தை குறைக்க விரும்பினால் அது சூர்யாவின் பகுதிகளாக இருக்கட்டும் என்று கூறப்பட்டிருக்கிறதாம். இந்த வெட்டு தீர்மானத்திற்கு திரையரங்கத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது வடிவேலு வட்டாரத்தை மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஏனென்றால் படத்தின் நாயகனே இவர்தான் என்கிறார்கள் ரசிகர்கள். இந்த வெட்டுக்கு பிறகு, இந்த தோற்றம் இன்னும் அழுத்தமாக வெளிப்படுவதுதான் வைகைப்புயலின் கொண்டாட்டத்திற்கு காரணமாம்.
0 Response to "சூர்யாவுக்கு வெட்டு… வடிவேலு மகிழ்ச்சி"
แสดงความคิดเห็น