சர்வதேச சமூகத்திற்கு நல்லதொரு சமிக்ஞை:தேர்தல் முடிவு குறித்து ஜனாதிபதி

தென் மாகாண மக்கள் வழங்கியுள்ள விசேட மக்கள் ஆணையானது அரசாங்கம் தொடர்பில் தவறான எண்ணத்தை தோற்றுவிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினருக்கும் சர்வதேச சமூகத்திற்கும் நல்லதொரு சமிக்ஞையாக அமைந்துள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வெற்றி தொடர்பில் முன்னணியின் தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ விடுத்து ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தென் மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணி பெற்றுக்கொண்ட வெற்றியானது அதிவிஷேடமானதாகும். அது மட்டுமன்றி தாய்நாட்டின் மீது அன்பு செலுத்தும் மக்கள் பெற்றுக்கொண்ட வெற்றியாகும்.
2005 ஆம் ஆணு“டு ஜனாதிபதி தேர்தில் எனது வெற்றிக்கான தென் மாகாண மாக்கள் விஷேடமான பங்களிப்பை வழங்கினார்கள் இந்த மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றக்கொண்டுள்ளது. எமது அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள விசுவாசத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காகவும் மஹிந்த சிந்தனைக்கு மாகாண மக்கள் மீண்டும் அனுமதி வழங்கியதை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
தென் மாகாண மக்கள் வழங்கியுள்ள விஷேட மக்கள் ஆணையானது அரசாங்கம் தொடர்பில் தவறான எண்ணத்தை தோற்றுவிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினருக்கும் சர்வதேச சமூகத்திற்கு நல்லதொரு சமிக்ஞையை காட்டியுள்ளனர். தேசத்தை பாதுகாப்பதற்கும் மக்கள் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்குமாக எம்மால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களும் மக்கள் தைரியத்தை ஊட்டியுள்ளனர்.
அபிமானமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான எமது மதிப்புமிக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இணையுமாறு சகலருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுக்கின்றேன். அரசியல் இனம், மத மற்றும் எந்தவொரு அழுத்தத்திற்கும் வரையறையின்றி தேசிய நலனுக்காக ஐக்கியப்பட்டமைக்காக தென்மாகாண மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
0 Response to "சர்வதேச சமூகத்திற்கு நல்லதொரு சமிக்ஞை:தேர்தல் முடிவு குறித்து ஜனாதிபதி"
แสดงความคิดเห็น