ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை வழங்க விருப்பமில்லையென்றால் தேவையில்லை – மஹிந்த

எந்தவொரு நிபந்தனைகளுக்கும் அடிபணிந்து வரிச் சலுகையை பெற்றுக் கொள்ளும் உத்தேசம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணி ஆலோசனை சபை கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் சலுகைத் திட்டத்தை ரத்து செய்யுமாறு கோரி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கொடிய பயங்கரவாதிகளுக்கு ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் பெரும்பகுதியை எழுத்து மூலமாக தாரை வார்த்துக் கொடுத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
வெற்றி கொள்ள முடியாது என நம்பப்பட்டு வந்த யுத்தத்தை அரசாங்கம் சொற்ப காலத்தில் முற்றாக தோற்கடித்துள்ளமையை எவரும் மறந்துவிடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Response to "ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை வழங்க விருப்பமில்லையென்றால் தேவையில்லை – மஹிந்த"
แสดงความคิดเห็น