jkr

ஈழ தமிழர்களின் துரோகி யார்? Who is Eelam Tamil’s traitor? - அர்ச்சுனன்!


30 ஆயிரம் இளைஞர்களை கொன்றொழித்து 3 லட்சம் மக்களை அகதிகளாக்கிவிட்டு தனது உயிரை பாதுகாப்பதற்காக படையினரிடம் சரண் அடைந்த பிரபாகரன் துரோகியா?

ஆயிரக்கணக்கான போராளிகளை காப்பாற்றி கிழக்கில் லட்சக்கணக்கான தமிழ் மக்களை அமைதியாக வாழ்வதற்கு காராணமாக இருந்த கருணா துரோகியா?

புலம் பெயர்ந்து வாழும் ஈழ தமிழர்களில் ஒரு பகுதியினர் தமக்கு வேண்டிய திசையில் இந்த பூமி சுற்ற வேண்டும் என்று நினைப்பவர்களாகவும், தாம் நினைப்பவை இந்த உலகில் நடக்கவேண்டும் என்று நினைப்பவர்களாகவும், தாமே தமிழர்களின் விடுதலை குறித்து சிந்திப்பவர்கள் என்ற நினைப்பு உடையவர்களாகவும் இருக்கின்றனர். உலகில் ஏற்படும் அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கு அமைய ஏற்படும் மாற்றங்களை இவர்கள் ஏற்பதற்கு தயாராக இல்லாதவர்களாகவும், தாம் நினைப்பவை நடக்க வேண்டும் என்றும் எதிர் பார்ப்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களில் சிலர் தமது எண்ணப்படியே இந்த உலகில் எல்லாம் நடப்பதாக கனவு காண்பவர்களாக இருக்கின்றனர். சாத்தியமானவற்றை உணர்ந்தவர்களாக (realistic) இவர்களினால் இருக்கமுடியவில்லை.இதனால் இவர்களின் கனவுகளுக்கு எதிராக நடப்பவர்கள் இவர்களுக்கு வேண்டதகாதவர்களாக, வெறுக்க தக்கவர்களாக இருக்கின்றனர்.

ஆகவே அவர்களை இவர்கள் துரோகிகளாக பார்கின்றனர். புலி சார்பு ஊடகங்கள் (printed media and electronic media) தாம் சார்ந்த அமைப்பின் மூடத்தனமான சிந்தாந்தங்களுக்கு மாறாக சிந்திப்பவர்களை மற்றும் தம்மை ஆதரிக்காதவர்களையும் துரோகிகள் என்று வர்ணிப்பது அவர்களின் நயவஞ்சகமான உள்நோக்கமாகும். இது குறித்து நாம் பெரிதாக அலட்டி கொள்ள தேவையில்லை என்ற போதும், இவர்களின் நயவஞ்சகமான உள்நோக்கங்களுக்குள் எமது மக்கள் உள்வாங்கி கொள்ளாத வகையில் பார்த்துக் கொள்ளவேண்டியது, உண்மையான் ஊடகவியலாளனின் உளமார்ந்த கடமை ஆகும்.

ஊடகவியலாளன் என்பவன் சமுகத்தின் ஆசானாக, ஆக்கபூர்வமாக அந்த சமூகத்தினை சிந்திக்க தூண்டுபவனாக இருக்கவேண்டும். செய்திகளை திரிப்பவனாகவும், மக்களை மாயையில் ஆழ்த்துபவனுமாக இருக்க கூடாது. (media suppose to be a teacher, but not a manipulator). நாட்டிற்கு வெளியேயான தமிழ் ஈழ அரசினை நிறுவி தம்மை ஆளும் உரிமை உடைய தமிழ் ஈழ அரசை நிறுவப்போவதாக கூறுபவர்களாக புலிகளின் ஊடகங்களும், அதனை நம்புபவர்களாக புலம் பெயர்ந்து வாழும் மக்களின் ஒரு பகுதியினரும் இருப்பதினை காணலாம். இந்நிலையில் மக்களை மாயையில் ஆழ்த்துபவர்களாக புலிகளின் ஊடகங்களும், சாத்தியமானவற்றை உணரும் தன்மை அற்றவர்களாக ஒரு பகுதி புலம் பெயர்ந்த மக்களும் இருப்பதினை அவதானிக்க கூடியதாக உள்ளது.

தமிழினத்தை காட்டி கொடுத்த கருணாவிற்கு சுகபோகம், அமைச்சு பதவி. ஆனால் எழுத்து துறையில் ஈடுபட்ட உணர்வுள்ள தமிழன் திஸநாயகத்திற்கு கடூளிய சிறை என்று லண்டனில் இருந்து வெளிவந்த புலிகளின் ‘புதினம்’ பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. திஸநாயகம் உணர்வுள்ள தமிழன் என்றால்!. பாலசிங்கம் இறக்கும் தறுவாயில் இருக்கையில் இறுதியாக அவரை சந்தித்த சுடர் ஒளி பத்திரிகை தலைமை ஆசிரியர் வித்தியாதரன் தமிழ் உணர்வு இல்லாதவரா? அவரும் சிறிலங்கா புலனாய்வு துறையினரால் கடத்தப்பட்டார் அல்லது கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆயர் படுத்தப்பட்டு சில வாரம் சிறையில் இருந்தார் பின்னர் விடுதலையானர்.

அரசிற்கு எதிராக தொடுத்த வழக்கையும் அவர் வாபஸ் பெற்று கொண்டார். இப்பொழுது கொழும்பில் வசித்தவாறு, அந்த பத்திரிகையினை நடத்தியவாறு இருக்கின்றார். புலிகளை ஆதரித்த திஸ்ஸநாயகத்திற்கு சிறைதண்டனையும், மற்றொரு ஆதரவாளரான வித்தியாதரனுக்கு விடுதலையும் கிடைத்தது ஏன்? இதனை மக்கள் ஆராய்ந்து பார்கவேண்டும். சிவராம் ஒரு அப்பளுக்கற்ற பத்திரிகையாளர், ஆய்வாளர் என்றெல்லாம் புலிகளின் ஊடகங்கள் அவரை புகழ்ந்து தள்ளின. மனித உரிமைகள் அமைப்பும், அரச சார்பற்ற நிறுவனங்களும் அவரை மனித நேயன் என எண்ணிக் கொண்டன.

ஆனால் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் உட்பட இருவரை படுகொலை செய்த பாதகன் சிவராம் என்று பலர் தெரிந்திருக்கவில்லை. ஒரு பத்திரிகையாளன் தன்னை ஒரு பத்திரிகையாளனாக காண்பித்துக் கொண்டு, படுகொலைகளுக்கு துணை போயிருந்தால்! கொலையாளிகளை நியாயப்படுத்தி இருந்தால்! அவர் அதற்கான விலையினை எப்போதோ ஒரு நாள் செலுத்தியாகவே வேண்டும்.

கருணா சுகபோக வாழ்வு என்று புதினம் பத்திரிகை தெரிவித்து, கருணா தனது அமைச்சிற்கான செயலாளருடன் நிற்கும் புகைப்படம் ஒன்றினையும் அந்த பத்திரிகை வெளியிட்டு இருந்தது. புலிகளின் தலைவரில் இருந்து தளபதிகள் வரை கலாச்சார சீரளிவிற்கு அமையவே தமது வாழ்க்கை துணைகளை தேடியிருந்தனர். புலிகளில் இணைபவர்கள் எவரும் திருமணம் செய்யக் கூடாது என்று சட்டம் பிறப்பித்து, அந்த அமைப்பில் இணையும் உறுப்பினர்களிடம் கையொப்பமும் வாங்கி விட்டு பின்னர் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் யாழ் பல்கலைகழத்தில் உண்ணாவிரதம் இருந்த மாணவியை கடத்தி வந்து மனைவியாக்கினார்.

சக இயக்க போராளி படையினரால் கொல்லப்பட்ட பின்னர் அவரின் மனைவியை தனது மனைவியாக்கி கொண்டார் மாத்தையா. சுழிபுரத்தில் முகாம் போடுவதற்கு வீடு கொடுத்த பெண்னின் மகளை காதலித்து கடத்தி சென்றார் தமிழ் செல்வன். தனது சொந்த சகோதரின் மனைவியை மறுமணம் செய்தார் புலிகளின் வான்படையை ஆரம்பித்த பொறியியலாளர் சங்கர். கடும் சுகயீனம் யுற்று இருந்த தனது மனைவிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவச்சியை மணந்து கொண்டார் புலிகளின் மதியுரைஞர் பாலசிங்கம். (இந்த மருத்துவச்சி மருத்துவம் பார்க்கையில் பாலசிங்கத்தின் மனைவி இறந்து போனார்) இப்படியாக புலிகளின் கதை இருக்கையில்,கருணாவை விமர்சிப்பதற்கு புலிகளின் ஊடகங்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது. ஊத்தையை சொறிந்து மூக்கு நுனியில் மணக்காதீர்கள்.

கருணாவா அல்லது பிரபாகரனா ஈழ தமிழர்களின் துரோகி ?

வெளிநாடுகளில் இலங்கை அரசுடன் புலிகள் நடத்திய பேசுக்களில் கலந்து கொள்வதற்காக கருணா செல்லுகையில் சர்வதேச அரசியல் நடப்புகளையும், மாற்றங்களை பார்பதற்கான சந்தர்ப்பங்களாக அந்த பயணங்கள் அவருக்கு அமைந்திருந்தது. அதனை அவர் தனது அரசியல் வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொண்டார். அவருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு மட்டும் கிடைக்காது இருந்திருந்தால்!.

அமெரிக்காவிற்கே தலைவர் அடிப்பார், தமிழ் ஈழம் அடுத்த தைப்பொங்களுக்குள் எடுத்து விடலாம் என்று, வன்னிக்குள் முடக்கப்பட்டு இருந்த ஏனைய போராளிகளைப் போல் அவரும் நம்பிக்கை கொண்டு இருந்திருப்பார். அரசியல் அறிவை பெற்றுக்கொள்ளும் திறனும், தன்னையும் வளர்த்துக் கொள்ளும் திறனும் (ability) அவரிடம் இருந்தது என்பதினை எவரும் மறுக்க முடியாது. இனியும் நாங்கள் முரண்டு பிடித்து கொண்டு இருந்தால் நாம் இல்லாது போய்விடுவோம் என்பதினை புலிகளுக்குள் முதலின் உணர்ந்து கொண்ட தளபதி கருணாவே ஆகும்.

சர்வதேசன்சமூகத்தின் நடுநிலையில் ஓரளவிற்கு நியாயமாக கிடைப்பதினை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனை செய்யாது தமிழ் ஈழம் தான் முடிந்த முடிவு என்று தொடர்ந்தும் தென்பகுதி மக்கள் மீது குண்டு தாக்குதல்களையும், அரசியல் தலைவர்கள் மீது தற்கொலை தாக்குதல்களையும் மேற்கொள்வோமாக இருந்தால்! மேற்கத்திய நாடுகள் அனைத்தின் ஆதரவில் நாம் அழிக்கப்பட்டு விடுவோம் என்பதினை கருணா உணர்ந்து கொண்டார். தமிழ் செல்வன் இதனை உணர்ந்து கொண்டாலும், தனது தகுதியை மீதிய அரசியல்துறை பொறுப்பு தலைவராலேயே தனக்கு கிடைத்தது, அதனை பாதுக்காக்க வேண்டுமானால் தலைவர் தீர்க்கதரிசமானவர் என கூறிக் கொள்வவேண்டிய தேவை அவருக்கு இருந்தது.

ஆனால் கருணா சாதாரண போராளியாக இணைந்து, தலைவரின் மெய்பாதுகாவலராகி, மெய்பாதுகாவல் அணிக்கு தலைவராகி, படையணிக்கு தலைவராகி, படையணிகளை உருவாக்கி, புலிகளின் இரண்டாம் கட்ட தலைவர் ஆகும் அளவிற்கு அவருக்கு திறமையும் தன்னம்பிக்கையும் இருந்தது. இவைகளினால் தமிழ் செல்வனை போன்று சிரிப்பு செம்மலாக இருக்கவேண்டிய தேவை கருணாவிற்கு இருக்கவில்லை.

நோர்வேயில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது நோர்வே அரசினால் சமஷ்ரி முறையினை அடிப்படையாக கொண்ட தீர்வு ஒன்று முன்மொழியப்பட்டு இருந்தது. இதனை இருபகுதியினரும் ஒப்புக்கொண்டு கையொப்பம் இட வேண்டும் என நோர்வே கேட்டுக் கொண்டபோது, அதில் ஒர் அளவிற்கு உரிமைகள் உள்ளடக்கப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்து இருந்தும், அதில் கைய்யொப்பம் இடுவதற்கு பாலசிங்கம் தயங்கியிருந்தார்.

அப்பொழுது கருணா அவரை உசார்படுத்தி கையெழுத்து வையுங்கள் என கேண்டு கொண்டபோது, நான் மாட்டேன், இதில் நான் கையெழுத்து இட்டால்! நான் வன்னிக்கு போகும்போது அவன(பிரபாகரன்) என்னை சுட்டு கொன்றுவிடுவான் என பாலசிங்கம் முற்றாக மறுத்து விட்டார். தமிழ் செல்வனுக்கு இதில் உடன்பாடு இருந்த போதும், கருணா போன்று வெளிப்படையாக காட்டி கொள்வில்லை. கருணா தொடர்ந்தும் வற்புறுத்தி பாலசிங்கத்தினை கைய்யெழுத்து இடவைத்து இருந்தார். பேச்சுவார்த்தைகளை முடித்துகொண்டு கருணா இலங்கை திரும்பியதும் இரவோடு இரவாக கருணாவும் தமிழ் செல்வனும் இணைந்து கைய்பொய்ப்பம் இட்ட தீர்வு நகலை ஜோஜ் மாஸ்ரரின் (இயற்பெயர்,குமார் பஞ்சரத்தினம், புலிகள் வைத்த பெயர் ஜோர்ஜ் மாஸ்ரர், முன்னாள் தபால் கந்தோர் அதிபர், பின்னர் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ் செல்வனின் மொழிபெயர்ப்பாளர்.

இவ்வருடம் ஏபரல் மாதம் 22 ஆம் திகதி முல்லைதீவு மாவட்டம் புதுமத்தாளன் பகுதியில் இராணுவத்தினரிடம் சரண் அடைந்து இருந்தார். புலனாய்வு துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டு தற்பொழுது பினையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்) உதவியுடன் அதனை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்து கொண்டனர்.

காலை எழுந்ததும் முதல் வேலையாக இந்த நகலை எடுத்து கொண்டு கருணாவும் தமிழ் செல்வனும் பிரபாகரனை பார்க்க சென்று இருந்தார்கள். இவர்கள் சென்ற போது பிரபாகரன் நின்றிருந்த நிலை இவர்கள் இருவரையும் திகைக்க வைத்தது. கடும் கோபத்துடன் கண்கள் சிவக்க காணப்பட்டு இருந்தார். கருணாமீது கடும் கோபம் கொண்டு கடும் வார்த்தைகளினால் அவரை பேசிவிட்டு, இது குறித்து விவாதிப்பதற்கு முக்கியமானவர்களை அழைக்குமாறு உத்தரவிட்டு இருந்தார்.

நாம் இரவோடு இரவாக இதனை மொழி பெயர்ந்து கொண்டு வருவதற்கு முன்னர், இந்த விடயத்தினை பிரபாகரனுக்கு தெரிவித்தவர்கள் யார் என்ற கேள்வி கருணாவிற்கு தமிழ் செல்வனுக்கும் ஏற்பட்டு இருந்தது. பாலசிங்கம் கையெழுத்து இட்ட விடயத்தினை பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் வழக்கறிஞர் உபத்திரகுமார் (உருத்திரகுமார்) பிரபாகரனுக்கு அறிவித்து விட்டார். குற்றம் கண்டு பிடித்து புகழ் வாங்கும் புலவர்களில் இவரும் ஒருவர். (பிரபாரனின் அழிவிற்கு காரணமானவரும் இவர்தான்.

கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றும் தறுவாயில் இருக்கையில், பிரபாகரன் அங்குள்ள மக்களை சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறிவிட்டு நாட்டை விட்டு தப்பி செல்லும் முடிவிலேயே இருந்தார். அவசரப்பட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என தடுத்தவர் இந்த உபத்திரகுமாரே ஆகும். நாட்டை விட்டு வெளியேறினால் மீண்டும் நாட்டுக்குள் நுழைவது என்பது கடினம் என்றும், கட்டுப்பாட்டு பிரதேசம் என்ற ஒன்றினை கைவிட்டால்! பின்னர் அது கடினம் என்றும் அவர் கூறியதோடு. நாங்கள் எப்படியாவது சர்வதேச அழுத்தத்தினை ஏற்படுத்தி யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்த முயற்சி செய்வோம் என அறிவுரை வழங்கியதும் இந்த உபத்திரகுமாரே ஆகும்.)

பாலசிங்கம் கையெழுத்திட்ட விடயத்தினை உருத்திரகுமார் தொலைபேசி மூலமாக பிரபாகரனுக்கு தெரிவிக்காது விட்டிருந்தால்! தீர்வு திட்டத்தின் மொழிபெயர்ப்பினை அவருக்கு காண்பித்து அவரின் ஒப்புதலை பெற்றிருந்திருக்கலாம் என்று கருணா எனக்கு முன்னர் கூறியிருந்தார்.

அடுத்த தினம் கூட்டப்பட்ட கூட்டத்தில் பிரபாகரன் முன்தினம் போன்று கோபமாகவே காணப்பட்டு இருந்தார். தமிழ் செல்வன் விமான தாக்குதலில் கொல்லப்பட்ட இடத்திலேயே அந்த கூட்டம் நடைபெற்று இருந்தது. நாங்கள் கஸ்ரப்பட்டு அடிபட்டு இவ்வளவையும் பெற்று வைத்திக்கின்றோம், ஆனால் நீங்கள் எங்களை விற்று விட்டு வந்துள்ளீர்கள் என்று பிரபாகரன் கூறினார். இதற்கு மேலாக பாலகுமார், நிதி பொறுப்பாளர் புகழேந்தி ஆகியோர் தமிழர்களை விற்று விட்டார்கள் இவர்கள் என கருணாவை பார்த்து கூறியதோடு, யுத்தத்தினை ஆதரிப்பவர்களாவும் காணப்பட்டு இருந்தனர்.

இந்த நிகழ்வை பற்றி கருணா கூறுகையில்“ அர்ச்சுனா எனக்கு என்ன ஆச்சரியம் எனில் யுத்த முனைகளில் போர் புரியும் பாணு, சொர்ணம், ஜெயம், போன்ற தளபதிகள் அமைதியாக இருக்க, வாய் ஜாலம் புரியும் பாலகுமார் போன்றவ்ர்களே அதிகம் யுத்த்த்தில் அக்கறை காட்டினார்கள்“ என்று கூறினார். அன்று கருணா கூறியதினை பிரபாகரன் செவிமடுத்து, ஒரு இடைக்கால தீர்வினை பெற்று இருந்தால்! பிரபாகரனுக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. அத்துடன் நாற்பதாயிரம் போராளிகள் அநியாயமாக தமது உயிர்களை போக்கியிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.

மேலும் மூன்று லட்சம் மக்கள் முட்கம்பிகளுக்குள் வாழவேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. புலிகள் கிளிநொச்சியினை விட்டு வெளியேறுகையில் மக்களை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றமை படும் பிற்போக்குதனமான செயல் ஆகும். அந்த மக்களை அவ்விடங்களிலேயே தங்க அனுமதித்து இருந்தால்.இன்று கிளிநொச்சி நகரம் மக்கள் இல்லாத வனாந்தரமாக காட்சியளித்து இருக்காது.

புலம்பெயர்ந்து வாழும் ஈழ தமிழர்களே! வடக்கு வாழ் மக்களே! சிந்தியுங்கள். அனைத்து தமிழ் இயக்கங்களை செயற்பட விடாது தடுத்து, அந்த அமைப்புக்களின் தலைவர்களை கொன்றொழித்து, அரசியல் தலமைகளை இல்லாதாக்கி, தமிழ் தரப்புகளை பலவீனப்படுத்தி, நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளை போராட்டம் என்ற போர்வையில் கொன்றொழித்து, இறுதியில் தனது உயிரை காப்பாற்றுவதற்காக படையினரிடம் சரண் அடைந்த பிராபாரன் தமிழ் இனத்தின் துரோகியா? ஆறாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளின் உயிர்களை பாதுகாத்து, கிழக்கில் அமைதி நிலவுவதற்கு காரணமாக இருந்த கருணா துரோகியா?

அனைத்து போராட்ட சக்கிகளையும் கடித்து தின்று பசியாறி விட்டு, தமிழ் தரப்பினை பலவீனமாக்கிவிட்டு இறுதியில் தனது கழுத்தினையே படையினரிடம் நீட்டிய புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பெரும்பான்மை அரசுகள் என்றும் நன்றி கடன் பட்டவர்களாக இருபார்கள். பல இயக்கங்களுக்கு எதிராக படையினர் போராட வேண்டிய கடினமான செயலை பிரபாகரன் இலகுவாக்கிவிட்டு தானும் மாட்டிக் கொண்டார். தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்ற உணர்வை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டு சென்று விட்டார். எனியும் ஈழதமிழர்கள் விடுதலை குறித்து பேசும் அருகதை புலிகளுக்கு இருக்கின்றதா?
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஈழ தமிழர்களின் துரோகி யார்? Who is Eelam Tamil’s traitor? - அர்ச்சுனன்!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates