பெஷாவர் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு : 20 பலி

பாகிஸ்தானில் இன்றைய ( 19 ஆம் திகதி ) குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாயினர். 45 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். தொடர்ந்து நடந்து வரும் குண்டுவெடிப்புக்கு முற்றுப்புள்ளி வராதா என இந்நாட்டு மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இன்று வழக்கம்போல் பெஷாவர் மக்கள் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். கைபர் வீதியில் உள்ள நீதிமன்ற வளாகம் அருகே கார் குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் பலரது உடல்கள் வீதியில் சிதறின. 20 பேர் பலியாகியுள்ளனர். 45 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.
பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். சம்பவம் நடந்த பகுதி பாதுகாப்பு படையினரின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பில் நொறுங்கிப்போன கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடிப்பு நடக்காத நாள் எந்நாளோ என்ற நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக இங்கு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்கதையாகி விட்டது.
0 Response to "பெஷாவர் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு : 20 பலி"
แสดงความคิดเห็น