கணக்கு வாக்கெடுப்பில் 4 மாத செலவிற்கு 36,268 கோடியே 79 இலட்சம் ரூபா ஒதுக்கீடு-பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிப்பு

ஆம் ஆண்டிற்கான முதல் நான்கு மாதங்களுக்கான செலவிற்கென 36,268 கோடியே 79 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாவிற்கான கணக்கு வாக்கெடுப்பு பிரேரணையை பிரதி நிதியமைச்சரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான சரத் அமுனுகம பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தார். கணக்கு வாக்கெடுப்பின் பிரகாரம் 66 அமைச்சுகளுக்கென 23 063 கோடியே 57 இல ட்சத்து 33 ஆயிரம் ரூபாவும் திணைக்கள ங்களுக்கென 12 582 கோடியே 97 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ஜனாதிபதியின் தலைப்பின் கீழ் 2300 கோடியே 32 இலட்சம் ரூபாவும் பிரதம அமைச்சர் அலுவலகத்திற்கு 654 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் நேற்றுக்காலை 9.30 மணிக்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்திற்கு பின்னர் கணக்கு வாக்கெடுப்பு பிரேரணையை பிரதி நிதியமைச்சரும் அமைச்சருமான சரத் அமுனுகம சமர்ப்பித்து உரையாற்ற முனைந்தார்.
இதனிடையே குறுக்கிட்ட எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் எம்.பி. யுமான ஜோசப் மைக்கல் பேரேரா எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒழுங்கு பிரச்சினையை கிளப்பி கணக்கு வாக்கெடுப்பு அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் முரணானதாகும் என்று சுட்டிக் காட்டினர். இதனால் சபையில் பெரும் சர்ச்சை நிலவியது. அதற்கு மத்தியிலேயே பிரதிநிதியமைச்சர் பிரேரணையை சமர்பித்து உரையாற்றினர்.
கணக்கு வாக்கெடுப்பு யோசனையின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சுக்கு 210 கோடியே 91 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாவும் தரைப் படைக்கு 3454 கோடியே 56 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாவும் கடற்படைக்கு 11600 கோடியே 66 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாவும் விமானப் படைக்கு 7816 கோடியே 66 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாவும் பொலிஸ் திணைக்களத்திற்கு 1240 கோடியே 17 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாவும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு 2978 கோடியே 33 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாவும் கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்திற்கு 1 கோடியே 66 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்திற்கு 49 கோடியே 90 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாவும், பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகத்துக்கு 69 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாவும், பாராளுமன்ற பிரதான அரசாங்க கொறடாவின் அலுவலகத்திற்கு 82 இலட்சத்து 51 ஆயிரம் ரூபாவும், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு 177 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தல்கள் திணைக்களத்திற்கு 36 கோடியே 62 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாவும், தேசியக் கல்வி ஆணைக்குழுவிற்கு 97 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாவும், மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாட்டு அமைச்சுக்கு 125 கோடியே 31 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாவும் புத்த விவகாரங்கள் திணைக்களத்திற்கு 165 கோடியே 29 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாவும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு 38 கோடியே 71 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாவும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்திற்கு 23 கோடியே ஆயிரம் ரூபாவும் இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களத்திற்கு 40 கோடியே 53 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை தேசிய வரவு செலவு திட்ட திணைக்களத்திற்கு 1692 கோடியே 61 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாவும் மது வரித் திணைக்களத்திற்கு 142 கோடியே 40 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாவும் சட்ட அலுவல்கள் திணைக்களத்திற்கு 1 கோடியே 88 இலட்சத்து 7 ஆயிரம் ரூபõவும் தேசத்தை கட்டியெழுப்புதல் நிர்மாணம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு 1867 கோடியே 78 இலட்சத்து 83 ஆயிரம் ரூபாவும் சமூர்த்தி திணைக்களத்திற்கு 3894 கோடியே 78 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாவும் இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சுக்கு 542 கோடியே 49 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சுக்கு 196 கோடியே 42 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாவும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு 1036 கோடியே 63 இலட்சத்து 3 ஆயிரம் ரூபாவும் சுகாதார நலத்துறை மற்றும் போசணை அமைச்சுக்கு 1966 கோடியே 66 இலட்சத்து 31 ஆயிரம் ரூபாவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு 187 கோடியே 40 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாவும் போக்கு வரத்து அமைச்சுக்கு 2746 கோடியே 15 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாவும் பெற்றோலிய வள அமைச்சுக்கு 147 கோடியே 23 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சகல மாவட்ட செயலகங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது கல்வி அமைச்சுக்கு 8556 கோடியே 55 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாவும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு 505 கோடியே 82 ஆயிரம் ரூபாவும் வடக்கு மாகாண சபைக்கு 3519 கோடியே 25 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாவும் மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சுக்கு 4363 கோடியே 93 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாவும் மீள் குடியமர்த்துகை அனர்த்த நிவாரன அமைச்சுக்கு 521 கோடியே 49 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாவும் உயர் கல்வி அமைச்சுக்கு 1947 கோடியே 16 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
0 Response to "கணக்கு வாக்கெடுப்பில் 4 மாத செலவிற்கு 36,268 கோடியே 79 இலட்சம் ரூபா ஒதுக்கீடு-பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிப்பு"
แสดงความคิดเห็น