வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து யாழ் குடாநாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சந்தித்தார்!
வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருந்து யாழ்.குடா நாட்டில் மீளக்குடியமர்த்தும் பொருட்டு அழைத்து வரப்பட்டிருந்த 3800ற்கும் மேற்பட்ட பொதுமக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
யாழ். குடாநாட்டிற்கு அழைத்துவரப்பட்ட மக்களை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீள்குடியமர்விற்கான உதவித் தொகையில் முற்பணமாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 5000 ரூபா வீதம் வழங்கியதுடன் மிகுந்த சிரமத்தின் மத்தியில் நம்பிக்கையுடன் சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பியுள்ள மக்கள் தமது எதிர்கால வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதன் ஆரம்ப ஏற்பாடாக வீட்டுப் பாவனைப் பொருட்கள் தொழில் செய்வதற்கான உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தவறான அரசியல் தலைமைகளால் மீண்டும் வழிநடாத்தப்பட்டு ஏற்கனவே எதிர்கொண்ட அவலங்களை மீண்டும் சந்திக்காது இருப்பதற்குச் சரியான தலைமையின் கீழ் அனைவரும் கூட்டாக அணி திரள்வதே மாற்று வழியாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

0 Response to "வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து யாழ் குடாநாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சந்தித்தார்!"
แสดงความคิดเห็น