அவசர காலச் சட்டத்தை முடிவிற்கு கொண்டுவருமாறு பிரான்ஸ் கோரிக்கை

மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரான்ஸ் நாட்டு மனித உரிமைகளுக்கான தூதர் பிரான்சுவா ஜிமேரி ,இலங்கையில் நிலவும் அவசரகால சட்டத்தை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான போர் முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 26 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் சட்டத்தை நீக்க வேண்டும் என்றார்.
அத்தோடு போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் குறித்தும் இலங்கை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
0 Response to "அவசர காலச் சட்டத்தை முடிவிற்கு கொண்டுவருமாறு பிரான்ஸ் கோரிக்கை"
แสดงความคิดเห็น