அதிகாரிகள் ஓய்வு பெற்றதன் பின்னர் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருக்க முடியாது: ஊடக அமைச்சர்

அதிகாரிகள் ஓய்வு பெற்றதன் பின்னர் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருக்க முடியாது என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பதவி வகிக்கும் சகல அதிகாரிகளும் ஒய்வு பெற்றதன் பின்னர் தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டுச் செல்ல வேண்டியது சாதாரண நடைமுறையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சுப் பதவியை துறந்ததன் பின்னர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருக்கும் உரிமை எனக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் இராணுவத் தளபதிகள் ஓய்வு பெற்றதன் பின்னர் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து கொண்டு அரசியல் நடத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
0 Response to "அதிகாரிகள் ஓய்வு பெற்றதன் பின்னர் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருக்க முடியாது: ஊடக அமைச்சர்"
แสดงความคิดเห็น