வாடகைக்கு வீடு தேடுகிறார் சரத் பொன்சேகா: உரிமையாளர்கள் மிரட்டப்படுவதால் பெறுவதில் சிரமம்

சரத் பொன்சேகாவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறுமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளதால், மிகக் குறுகிய காலத்தில் பொருத்தமான வீடொன்றைப் பெறுவதில் அவர் பலத்த சிரமத்தை எதிர் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
அத்துடன், புல்லர்ஸ் வீதியில் உள்ள வீட்டையும் அங்குள்ள அனைத்துத் தளபாடங்களுடனும் அடுத்த சில நாட்களுக்குள் கையளிக்குமாறும் பாதுகாப்பு அமைச்சு சரத் பொன்சேகாவைக் கேட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வீடொன்றை வாடகைக்குப் பெறவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை, தனக்கு வீட்டை வாடகைக்கு அளிக்க முன்வரும் வீட்டு உரிமையாளர்கள் மிரட்டப்படுகின்றனர் என முன்னாள் இராணுவத் தளபதியை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆயினும், ஜெனரல் சரத் பொன்சேகா தான் இதுவரை 15 வீடுகளைப் பார்வையிட்டுள்ளதாகவும், இந்த வீடுகளின் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் மிரட்டப்படுவதனால் பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Response to "வாடகைக்கு வீடு தேடுகிறார் சரத் பொன்சேகா: உரிமையாளர்கள் மிரட்டப்படுவதால் பெறுவதில் சிரமம்"
แสดงความคิดเห็น