புலிகளுக்கு உயிர்கொடுக்க சிலசக்திகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக -திவயின தெரிவிப்பு!

யுத்தரீதியில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு உயிர்கொடுக்க சில சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. புலிகள் இயக்கம் மீண்டும் இயங்குவதாக வெளிகாட்டும் வகையில் உள்நாட்டில் இயங்கிவரும் சிலர் முயற்சி மேற்கொண்டு வருவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கடந்த 9ம்திகதி விடுதலைப்புலிகளின் தலைமையகத்திலிருந்து வெளியான செய்திகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் இயங்கிவரும் விடுதலைப்புலிகளின் இணையதளங்களுக்கு குறித்த செய்தி கொழும்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் உள்ள சில ஊடகவியலாளர்கள் இந்த தகவல்களை அனுப்பி வைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் திவயின மேலும் தெரிவித்துள்ளது.
0 Response to "புலிகளுக்கு உயிர்கொடுக்க சிலசக்திகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக -திவயின தெரிவிப்பு!"
แสดงความคิดเห็น