ஜெனரல் சரத் பொன்சேகா இன்று காலை நாடு திரும்பினார்

முன்னாள் இராணுவத் தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவிலிருந்து இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்த இராணுவத் தளபதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க கிறீன் காட் உரிமை பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஒக்லஹோமாவிலுள்ள தமது இரு மகள்மாரையும் பார்ப்பதற்காகவே அங்கு சென்றிருந்தார்.அங்கு சென்ற இராணுவத்தளபதி போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள அமெரிக்க பிரஜா உரிமை பெற்றுள்ள பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியங்கள் வழங்கக் கூடுமென அரசாங்கம் அச்சமடைந்திருந்ததாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் எவ்வித விசாரணைகளுக்கும் உட்படாமல் இராணுவத் தளபதி இன்று காலை நாடு திரும்பியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
0 Response to "ஜெனரல் சரத் பொன்சேகா இன்று காலை நாடு திரும்பினார்"
แสดงความคิดเห็น